கோவையில் நடிகர் கமல்ஹாசன் - மண்டல நிர்வாகிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை

கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்கிறார்.

அதனை தொடர்ந்து தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.



இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.



அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



அதனை தொடர்ந்து காரில் ஏறி கட்சியினர்களுக்கு கையசைத்தவாறு ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார். ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...