கோவையில் மீண்டும் போட்டியிடத் தயார் - மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவிப்பு

கோவை கொடிசியா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.



கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட கோவை மண்டல நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



இதனைத் தொடர்ந்து கோவை கொடிசியா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.



கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,தேர்தலில் போட்டியிட பல்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. பழிக்கு பழிவாங்க வேண்டும் என கோவையில் அழைக்கிறார்கள். சென்னையிலும் அழைக்கிறார்கள். கோவைக்கு அழைத்தால் மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேரை ரெடி செய்ய வேண்டும் . விக்ரம்க்கு கூட்டம் சேர்ந்தது. மநீம விற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? .எனக்கு மூக்கு உடைந்தால் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து கோவையில் மீண்டும் நிற்கிறேன் என்று ஆலோசனைக்கூட்டத்தில் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...