கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்றவர்களை வெட்டிய சம்பவம் - 5 பேர் கைது

வழக்கு ஒன்றில் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்றவர் மற்றும் அவரது நண்பர்களை ராம்நகர் பகுதியில் ஓட ஓட துரத்தி வெட்டிய சம்பவத்தில் 5 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24), அருண் பிரகாஷ்(22), பிரகாஷ்(26), ஆதித்யன்(23), கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமினில் வெளியில் வந்த நிலையில் கடந்த 12ம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு அவரது நண்பர்களான ரஞ்சித் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.

அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற 9 பேர் கொண்ட கும்பல், ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகில் நிதீஷ் குமாரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இந்தசம்பவத்தில் நிதிஷ்குமாரின் நண்பர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தற்பொழுது சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24), அருண் பிரகாஷ்(22), பிரகாஷ்(26), ஆதித்யன்(23), கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...