புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு - கவுண்டம்பாளையம் MLA தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை உருமாண்டம்பாளையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு உருமாண்டம்பாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை துவக்குவதை கண்டித்தும், ஏற்கனவே இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த 3 அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வழியுறுத்தியும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உற்றுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உருமாண்டம்பாளையம் பகுதியில் இதுவரை டாஸ்மாக் கடை இருந்ததில்லை என்றும், ஊருக்குள் கண்டிப்பாக டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தன்ர்.

உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடை திறக்க அரசு முயற்சி செய்வதாக தெரிவித்தனர்.



மேலும் மக்கள் பயணத்துக்கு இருந்த பேருந்து எண் 97 மற்றும் S9D ஆகியவற்றை மீண்டும் இயக்க கோரி பல முறை மாவட்ட ஆட்சியர், சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் செய்யவுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் ஆய்வாளார் ரத்தினகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் முத்திருளப்பன் உள்ளிட்ட போலிசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியதின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதில் பகுதி செயலாளர் வனிதாமணி, வார்டு செயலாளர்கள் பந்தல்வீடு பிரகாஷ், சாந்திபூசன் நிர்வாகிகள் ராஜா, ரங்கநாதன், சி.டி.சி.செல்வம், ஜெகதீசன், ஸ்ரீனிவாசன், ரவி, ராஜூ, சரவணன், தாடி பழனிசாமி, நந்தகுமார், கதிரேசன், குமார், நந்தகோபால், மகளிர் அணியை சேர்ந்த பண்ணாரி, சரஸ்வதி, பார்வதி, கிருஷ்ணம்மாள், ராஜாம்மாள், பத்ராம்மாள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...