உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



திருப்பூர்: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும் என்றும் அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும். அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் திருமூர்த்திமலை அடிவார பகுதிகளில் யாணைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் மின்வேலிகளை பாராமரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வருவாய் கோட்டாச்சியரிடம் தெரிவித்தனர்.

சம்பந்த அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோட்டாச்சியர் அறிவுறுத்தினர். உடுமலை வட்டாச்சியர் சுந்தரம், மடத்துக்குளம் வட்டாச்சியர் செல்வி,சமூகநலத்திட்டம் வட்டாச்சியர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...