இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமாரின் 7ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி கோவையில மௌன ஊர்வலம்

கோவையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் ஏழாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி கோவையில் மௌன ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி  நடைபெற்றது.



கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.



அவரின் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து சசிகுமாரின் ஒவ்வொரு நினைவு தினத்தன்று இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏந்தி மௌன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.



ஏழாம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஜி.என்.மில்ஸ் பகுதியில் இந்து முன்னணியினர் மோட்ச தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.



இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மோட்ச தீபத்தை ஏற்றி வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.



இந்து முன்னணி மாநிலச் செயலாளர் ஜெ.எஸ் கிஷோர் குமார் முன்னிலை வகித்தார்.



ஊர்வலத்தில் 200 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஜி.என்.மில்ஸ் பகுதியில் தொடங்கிய மௌன ஊர்வலம், à®šà®šà®¿à®•ுமார் படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியம்பாளையம் வரை நடைபெற்றது.



ஊர்வலத்தின் இறுதியில் மோட்ச தீபம் ஏந்தி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சசிகுமாரின் திருவுருவ படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.

இந்து முன்னணி கோட்ட செயலாளர் உருவைபாலன், மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், இந்து வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் முருகானந்தம், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் படையப்பா முருகன், மாவட்ட பொருளாளர் அசோக் உள்ளிட்ட பலர் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர். சசிகுமாரின் நினைவஞ்சலி மற்றும் மௌன ஊர்வலத்தையொட்டி 350க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...