22 வயதிலேயே அரசியலுக்கு அழைத்த கலைஞர் - தயக்கம் காட்டிய கமல்ஹாசன்

22 வயதிலேயே கலைஞர் தன்னை அரசியலுக்கு அழைத்ததாகவும் அப்போது தயக்கம் காட்டியதாகவும் கோவை சூலூரில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழுமங்களின் பொன்விழா, சிறந்த ஆசிரியர் மற்றும் துரோணா விருது விழா கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகனுமான பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் அவர்கள் கலந்து கொண்டார்.

மறைந்த பார் கல்வி குழுமங்களின் நிறுவனர் பிரேமா ரவி அவர்களின் அருளாசியுடன் பார்க் கல்வி குழுமங்களில் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பி.வி ரவி, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி மற்றும் செயலாளர் டி. ஆர். கார்த்திக் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பார்க் பொன்விழா ஆண்டு 2023 துரோணா விருது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் “தி மூன் மேன் ஆஃப் இந்தியா” என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் "கையொப்பம்" நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர்/எழுத்தாளர் புவியரசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



மேலும் பார்க் கல்வி குழுமங்களின் முன்னாள் மாணவர்களான சந்திராயன் மூன்று திட்ட அலுவலர்களான ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.



விழாவில் முன்னாள் மாணவர்கள் பிக் பாஸ் சீசன் 6 புகழ் நடிகை ஷிவின் கணேசன், திரைப்பட தயாரிப்பாளர் கே.விஜய் பாண்டி, ஆப்ஷன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான சுஜித், யோகா போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற யோகா டிரெயினர் வைஷ்ணவி உட்பட்டவர்களுக்கு சிறப்பு முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கி கெரவிக்கப்பட்டது. கோவை மாநகரில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

பின்னர் இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன்,



என் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு ஏராளமான ஆசிரியர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள் எனவும் அம்மா அப்பாவில் தொடங்கி என்னை இயக்கிய இயக்குனர்கள், என்னுடன் பழகிய கவிஞர்கள் என அனைவரையுமே எனக்கு ஆசிரியர்கள் அவர்களை நினைக்காத நாளில்லை என பேசினார். தற்போது விருது பெற்ற புவியரசு, நான் நடத்திய மையம் பத்திரிக்கைக்கு அவர்தான் தலைமை ஆசிரியர் எனவும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் விண்வெளி துறையில் சாதித்து காட்டி வருகிறார்கள் என பேசினார். தமிழ் வழியில் படித்து விண்வெளியில் சாதனை புரிந்து வருவதாகவும், அரசியல் இல்லாத சமூகம் உருவாகியுள்ளது தேர்தல் நாளை விடுமுறை நாளாக எண்ணி கொண்டிருக்கிறார்கள் எனவும் கமல்ஹாசன் கூறினார். தற்போதைய சமுதாயத்தினர் இட ஒதுக்கீடு அரசு வேலை என்பது என்னவென்று தெரியாமல் இருப்பதாகவும் அடிமைப்பட்டு கிடக்க கூடாது என்று நமக்கு காந்தி உள்ளிட்டவர்கள் கற்றுக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.

நான் ஜப்பான் சென்றிருந்தபோது அந்த நாட்டில் என்ன இல்லை நம்ம நாட்டில் என்னவெல்லாம் இருக்கிறது எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்பதை கூகுளில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளவும் என கூறிய கமல்ஹாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் தகுதியானவர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதை அறிந்து ஓட்டு போட வேண்டும் எனவும் ஒத்தையா இரட்டையா என்று ஓட்டு போடக்கூடாது காசு வாங்காமல் வாக்களிக்கும் போது தான் உண்மையான அரசியல் வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் பேசினார். அரசியலில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அரசியல் நம்மளை தாக்கும் முன்பாக நாம் அரசியலை தாக்க வேண்டும். 

நான் 22 வயது இளைஞனாக இருக்கும் பொழுது கலைஞரிடம் இருந்து அரசியல் சேர வேண்டும் என்பதற்கான டெலிகிராம் வந்தது. அவருடன் அரசியலில் சேரலாமா வேண்டாமா என்று சொல்லாமல் அப்படியே இருந்து விட்டேன் ஆனால் 60 வயதை தாண்டி எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது ஜனநாயகம் தான் என்னை காப்பாற்றியது குறிப்பாக மக்கள் தான் என்னை காப்பாற்றினார்கள் என் வீட்டு பத்திரம் கூட பறிபோனது இன்னும் கொஞ்சம் முன்னாடி அரசியலில் வந்திருந்தால் எண்ணற்ற திட்டங்களை செய்திருப்போம் எனவும் கமல் கூறினார். 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கக் கூடியது ஆனால் 2029 வரை காத்திருப்பது என்பது வேதனைக்குரியது என தெரிவித்த கமல், பெண்கள் 33லிருந்து 50 சதவீதம் வரை உயர வேண்டும் அரசியல் பங்களிப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் மாணவர்களும் ஆசிரியரிடம் மன அழுத்தம் இருக்கும் போது அவர்களிடம் கலந்து விளையாட வேண்டும் என பேசிய கமல்ஹாசன், ஆசிரியர்கள் முக்கியமாக மூன்று விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என பேசினார். அறிவுணர்வு, தீவிரத் தன்மை, அரசியல் புரிதல் வரலாறு உள்ளியவற்றை கற்றுத் தர வேண்டும் எனவும் கமல் பேசுவது மையத்தின் அரசியல் அல்ல உங்களின் அரசியல் உங்களுக்கான அரசியலை மட்டும் தான் பேசியிருக்கிறேன் என தெரிவித்தார் 

தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, நிலவுக்கு சந்திராயன் அனுப்புவதற்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவு. அதையும் தாண்டி குறைந்த செலவில் 340 கோடி பட்ஜெட்டில் கமலின் பட பட்ஜெட்டை விட குறைவாக நிலவுக்கு அனுப்பியுள்ளோம் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என பேசினார். சமுத்திரத்தை ஆராய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், நிலவில் உள்ள ஹிலியத்தை கொண்டு வந்து நாம் பயன்படுத்தும் போது இந்தியாவிற்கு எரிபொருள் தேவையே இல்லாமல் போகும் என முண்டாசு கவிஞர் சொன்னது போல நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி உள்ளோம் எனவும் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...