தாராபுரத்தில் பெய்த கனமழை - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வரும் 24-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



தாராபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலையிலிருந்து மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.பகல் நேரங்களில் அனல் காற்றும் வீசியது. திடீரென்று மதியம் 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.



தொடர்ந்து தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குண்டடம் ருத்ராவதி, மேட்டுக்கடை, அலங்கியம், மூலனூர், கன்னிவாடி, மாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...