உடுமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவதால், கோவில் ஊழியர்களும், வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இடைவிடாமல் பெய்தது.



இதன்காரணமாக பல மாதங்களாகவே வறண்டு காணப்பட்ட பஞ்சலிங்க அருவியில் திடீர் நீர்வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் பின்புறம் உள்ள கன்னிமார் கோயில் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.



நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...