மகளிர் உரிமை திட்டம் ஏமாற்றும் திட்டம் - உடுமலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தற்பொழுது மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது என உடுமலையில் மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தில் அண்ணாமலை புகார் தெரிவித்தார்.



திருப்பூர்: மதுபான கடையை நம்பி ஆட்சி செய்யும் அரசு ஒரே அரசு திமுக அரசு தான் என பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசின் மகளிர் உரிமை திட்டம் ஏமாற்றும் திட்டம் என உடுமலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் என் மண் என் மக்கள் யாத்திரை ராஜகாளியம்மன் கோவில் பகுதிகளில் துவங்கி உடுமலை நகரில் முக்கிய வீதிகள் ஆன பழைய பஸ் நிலையம், பெரிய கடை வீதி, தளி ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,




காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்று உள்ளது.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு தலைவர்கள் ஒருங்கிணைந்து ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதை கூறலாம். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குடும்ப ஆட்சி என கூறலாம். தமிழக முதல்வர் அப்பா , மகன் அமைச்சர் ,தங்கை எம் பி மற்றும் உறவினர்களுக்கு முக்கிய பதவிகள் என குடும்பத்தினர் மட்டும் ஆட்சி செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தற்பொழுது மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆறு மாதம் மட்டும் செயல்படுத்தும் திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தற்பொழுது தமிழகம் உள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக பல்லடத்தில் ஒரே இரவில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அரசு மதுபான கடையை நம்பி ஆட்சி செய்யும் அரசு ஒரே அரசு திமுக அரசு தான்.



மேலும் முன்னாள் அமைச்சர் காமராஜர் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை கட்டிய நிலையில் தற்போது உள்ள திமுக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. உடுமலையில் கஞ்சா விற்பனை இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபான விடுதிகள் செயல்பட்டு வருவதால் குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் காணப்படுகின்றது.

இவற்றை தடுக்க வேண்டும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைக்க உரிய நிதி ஒதுக்க வேண்டும். உடுமலை அருகே வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகமாக காணப்படுகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் வனத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை உட்பட பல்வேறு கருத்துகளை பேசினார்.

கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளர் முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் மாநில, மாவட்ட சாரப்பு அணி நிர்வாகிகள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...