பிரபல வனவிலங்கு ஆர்வலர் எஸ்.ஜெயச்சந்திரன் உதகையில் மாரடைப்பால் மறைவு - அவருக்கு வயது 65

பிரபல பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான எஸ்.ஜெயச்சந்திரன் 65, மாரடைப்பால், உதகையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.


உதகை: நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் பணியாற்றிய எஸ்.ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் நிலப்பரப்புகளின் காடுகளையும் வனவிலங்குகளையும் சுமார் 30 ஆண்டுகளாக பாதுகாக்க பாடுபட்டார் எஸ்.ஜெயச்சந்திரன்.

அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் (TNGM) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது நீலகிரியில் தொழில்துறையின் வருகை மற்றும் மர மாஃபியாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.

இதனையடுத்து, நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் அவர் பணியாற்றினார். இந்நிலையில்,உதகையில் உள்ள இல்லத்தில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...