பல்லடம் நான்கு பேர் கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



திருப்பூர்: நான்கு குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்த உத்தரவுப்படி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த குட்டி என்கின்ற வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து, மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா ஆகிய நான்கு குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்த உத்தரவுப்படி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற மனப்பாறையை சேர்ந்த செல்லமுத்து கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் தப்பிக்க முயன்ற போது சுட்டுப் பிடிக்கப்பட்டு இரண்டு கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ராஜ்குமார் ஆகிய மூவரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குட்டி என்கிற வெங்கடேஷ், செல்லமுத்து, ஐயப்பன், மற்றும் சோனை முத்தையா ஆகிய நான்கு பேர் மீதும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...