மின்வாரியம் சார்பாக சிறப்பு முகாம் - காலநீட்டிப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் மின்சார வாரியம் சார்பாக நடைபெறும் மின் இணைப்பு, பெயர் மாற்றும் சிறப்பு முகாமை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வீடு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தும் வசதி உள்ள நிலையில், பொதுமக்கள் நலனுக்காக அலுவலகத்தில் கட்டணம் செலுத்திய அன்றே பெயர்மாற்றம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது.

ஒரு மாதம் நடந்த இந்த சிறப்பு முகாம் காலநீட்டிப்பு செய்யப்பட்டது. மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ஆதார் அட்டை, சொத்து வரி ரசீது நகல், விற்பனை பத்திர நகலை வைத்து பெயர் மாற்றம் செய்துவந்தனர்.

மின் இணைப்பு அட்டையில் பெயர் உள்ளவர்கள் இறந்து விட்டால் பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ், செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதம் துவங்கப்பட்ட இந்த சிறப்பு கால நீட்டுப்பு செய்யப்பட்டு இன்றுடன் முடிவடையும் நிலையில் முகாமுக்கான அவகாசத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாதம் கிருஷ்ணர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை என தொடர்ந்து வந்ததால் பலரும் இந்த சிறப்பு முகாமில் முழுமையாக பயன்பெற முடியவில்லை எனவும் எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு முகாமை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...