எம்எல்எம் தொழிலுக்கு தனி சட்டம் தேவை - ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் கோவையில் கோரிக்கை

ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் சார்பில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அசோசியேசன் தலைவர் மனோகரன், மற்ற மாநிலங்களை போல் எம்எல்எம் தொழிலுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றார்.


கோவை: கோவையில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் தலைவர் மனோகரன், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் எம் எல் எம் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கியது போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வழங்கிட வேண்டும் என்றார்.



ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் 14 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளதாகவும், மக்களை ஏமாற்றும் எம்எல்எம் கம்பெனிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்திவருவதாகவும் தெரிவித்தார். சில எம்எல்எம் நிறுவனங்கள் முறையாக மத்திய, மாநில அரசுகளிடம் முறையாக அங்கீகாரம் பெற்று டிடிஎஸ், ஜிஎஸ்டி போன்ற முறையாக செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைபுகளை உருவாக்கி தந்து வருகின்றது. இதனால் இந்தியா முழுவதும் படித்த பட்டதாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு நேரம் வேலை வாய்ப்பாக 5 கோடி பேரையும் பகுதி நேர வேலை வாய்ப்பாக சுமார் 12 கோடி பேரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.

ஆகவே எம்எல்எம் இண்டஸ்ட்ரியைக்கு தனி சட்டம்,தனி அமைச்சகம்,நல வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றார்

கடன் உதவி,சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டி மத்திய, மாநில அரசு பலமுறை கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.ஆனால் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் MLM தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் முறையான அனுமதி பெறாமல் போலியான இணையதளங்களை வைத்து பல மடங்கு வட்டி தருவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி வருதாக தெரிவித்தார்.

MLM என்ற பெயரில் தொடங்கப்பட்ட போலி இணையதளங்கள் செயலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலி இணையதளங்கள் முடக்க கோரி மத்திய மாநில அரசையும்,காவல் துறையும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட முகவர்,மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசாரங்கள் கொடுத்து உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி,சட்ட ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்பூர்வமாக உதவிகள் மற்றும் ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...