மேட்டுப்பாளையத்தில் சைக்கிளை திருடிய முதியவர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடிப்பு

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.


கோவை: சைக்கிகளை மட்டுமே குறிவைத்து திருடுவதை முதியவர் வாடிக்கையாக வைத்துள்ள போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்கிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் இருந்து சைக்கிளை லாவகமாக திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...