கோவைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வழி நெடுகும் உற்சாக வரவேற்பு

சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற உள்ள மண்டல பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்கிறார்.



கோவை: திமுகவின் கோவை மண்டல அளவிலானபூத்முகவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில்மாலை நடைபெறுகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

தமிழக ஏடிஜிபி அருண், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்விற்கு பின்பு திருப்பூர் மாவட்டத்திற்கு புறப்படுகிறார்

கட்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் கார் மூலம் கோவை விமான நிலையம் வரும் முதல்வர் இரவு 8-50 விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் வருகையொட்டி கோவை திருப்பூர் மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து ஒட்டலுக்கு சென்ற அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...