காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் - செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கொடியேற்றி துவக்கி வைத்தார்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் காங்கேயத்தில் திமுக பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நடைபெற்றது. 14 திமுக மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 14,411 பூத் முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பூத் முகவர்களின் பங்களிப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.



பூத் முகவர்கள் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...