உடுமலை வனப்பகுதியில் தூய்மை பணி தீவிரம் - பிளாஸ்டிக், தண்ணீர் பாட்டில்கள் அகற்றம்

உடுமலை வனப்பகுதியை துய்மைப்படுத்தும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர். வனத்துறையின் விழிப்புணர்வால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருவது மகிழ்ச்சிக்குரியது.


திருப்பூர்: உடுமலை வனச்சரகம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது.

உடுமலை- மூணாறு நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில் இந்த கோவில்அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அடர்ந்த இந்த வனப்பகுதியில் யானை உட்பட பல வன விலங்குகள் உள்ளன. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இந்த வனப்பகுதியில் தண்ணீர் கூட கிடையாது. ஆகவே வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்குகள் தண்ணீருக்காக அந்த பாட்டில்கள் ,பிளாஸ்டிக் பைகளை உண்பதால்பாதிக்கப்படுகின்றன.

ஆகவே வன விலங்குகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டும், வனப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வனத்தூய்மை பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இந்தாண்டும்உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மணிதலைமையில் வனத்தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் மணி கூறுகையில் "கடந்த ஆண்டு வனத்துய்மைப் பணியில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையுடன் இணைந்து ஈடுபட்ட போது 25க்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த வருடம் தமிழ்நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு பதாகைகள் மூலம் வழி முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர், வனச்சரகர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோரின் விழிப்புணர்வினாலும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே மிக குறைந்த அளவே பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. அதற்காக வனத்துறைக்கு தன்னார்வலர்கள் சார்பில் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.



வனத்தூய்மைப்பணியில் உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், பேராசிரியர்கள் திருமாவளவன், காந்தி துரை, கண்டிமுத்து சுற்றுச்சூழல் சங்க உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுந்தரம், பாலு, தலைமையாசிரியர் தங்கவேல் உடுமலை ராயல் அரிமா சங்கத் தலைவர் யோகானந்த், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சக்திவேல், மற்றும் எவர் ரீ நியூ பொறியாளர்கள் ஆகியோர் உட்பட 35 பேர் கொண்ட தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



இப்பணியினை உடுமலை ராயல்ஸ் அரிமா சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...