சென்னையில் அதிமுக கூட்டம் - கோவையில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி

சென்னையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து சென்னை புறப்பட்டார்.


கோவை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அமல் கந்தசாமி, உட்பட அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...