நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் - தாராபுரத்தில் 43வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் கோனாரிபட்டி அருகேயுள்ள நல்லதங்கள் அணைக்கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டு கேட்டு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 43வது நாளில் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலத்திற்கு இழப்பீடு வழங்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என நல்லத்தங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்காள் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவதற்காக 97 விவசாயிகள் 850 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். இதற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.



43வது நாளான நேற்று மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...