நீதிமன்ற உத்தரவுபடி கோவை சட்டமன்ற உறுப்பினர், பாஜக மாவட்ட தலைவரின் நிலங்கள் மீட்பு

கோவையில் நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோருக்கு சொந்தமான 229 கோடி ரூபாய் மதிப்புடைய உபரி நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.



கோவை: 45.82 ஏக்கர் உபரி இடங்கள் அனைத்தும் வருவாய்த்துறையினர் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலை, கொடிசியா அருகில் 10 புல எண்களின் கீழ் 45.82 ஏக்கர் புஞ்சை நிலங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்தம் மற்றும் உச்ச வரம்பு சட்டத்தின்படி உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் கடந்த ஏழாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில் அந்த நிலங்களை மீட்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த நிலங்களை மீட்கக் கூடிய பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர். 

229 கோடி ரூபாய் மதிப்புடைய இடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை நட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடு பா.ஜ.க கோவை மாவட்ட பாலாஜி உத்தம ராமசாமிக்கு சொந்தமான வீடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள 20 வீட்டு மனைகளை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் விற்பனை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்த இடங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...