நாமக்கல்லில் நடைபெறும் சூதாட்ட விடுதி - கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சி மனு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவங்காடு குடியிருப்பு பகுதியில் நடைபெறும் ராயல் ரெக்ரியேசன் கிளப் என்ற சூதாட்ட விடுதியால் மக்கள் பாதிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பவானியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இணைந்து நடத்தி வரும் சூதாட்ட விடுதியால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழ் புலிகள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவங்காடு குடியிருப்பு பகுதியில் ராயல் ரெக்ரியேசன் கிளப் என்ற சூதாட்ட விடுதி நடைபெற்று வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் "அந்த சூதாட்ட விடுதியை ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பவானியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இணைந்து நடத்தி வருவதாகவும், அங்கு நாள்தோறும் சீட் ஆடுவதற்கு வெளி ஊர்களில் இருந்து வரும் நபர்களால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தங்கள் கிராம மக்களையும் சீட்டு ஆடுவதற்கு அழைப்பதால் பலரும் வேலைகளுக்கு செல்லாமல் சீட்டு ஆடுவதற்கு செல்வதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் இதனால் பணங்களை இழந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த சூதாட்ட கிளப் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே அரவங்காடு அரசு பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், அவ்வழியாக செல்லும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சமாக இருப்பதாகவும் இது பற்றி பலமுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...