பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக - ஒற்றை வரியில் பதில் கூறிய அண்ணாமலை

அதிமுக பாஜக கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும் என கோவையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.



கோவை: சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.



இந்நிலையில் கோவையில் நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அண்ணாமலை பங்கேற்றார்.

அப்போது, அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்தான கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒற்றை வரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றால் நம்முடைய தேசிய தலைமை இது குறித்து பேசுவார்கள் என்றார்.

ஏனென்றால் பாஜக ஒரு அகில இந்திய கட்சி, தேசிய தலைவர்கள் பலர் உள்ளார்கள். அதிமுகவின் முடிவு டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு தற்பொழுது சென்றுள்ளது.

எனவே அவர்கள் பேசுவார்கள் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...