அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் - எவ்வித கருத்தும் சொல்ல முடியாது என வானதி சீனிவாசன் திட்டவட்டம்

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், தேசிய தலைமை கருத்து கூறும் வரை எவ்வித கருத்தும் கூற மாட்டோம் என கோவையில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: சென்னையில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார் எனவும், தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் கருத்தையும் வெளியிடுவதாக இல்லை என திட்டவட்டமாக கூறினார். தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தரும் போது, எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம் எனவும் அதிமுகவினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...