அதிமுக கூட்டணி முறிந்த விவகாரம் - திருப்பூரில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

அதிமுகவினர் கூட்டணியை முறித்துக்கொண்டதை திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: அதிமுக கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது என்றும், தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கடந்த சில தினங்களாகவே முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில் , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி முடிவுற்றதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் இதுவரை கூட்டணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து பேசிய பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் இந்த கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும். அதிமுகவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றிய தொண்டர்கள் 2 பேர் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...