வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் முகாம் - எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சம்

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: முடீஸ் முத்துமுடி, சின்கோனா, புதுத்தோட்டம், நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழைக்கு பின், கேரளாவிலிருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இடம்பெயர்ந்து வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.

குறிப்பாக, முடீஸ் முத்துமுடி, சின்கோனா, புதுத்தோட்டம், நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாகமுகாமிட்டுள்ளன.

பகல் நேரத்தில் யானைகள் தேயிலை காட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இரவு நேரங்களில் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, யானைகள் நடமாடும் பகுதியில், சுற்றுலா பயணியர் செல்வதை தவிர்க்க வேண்டும். எஸ்டேட்டில் யானைகள் முகாமிட்டிருந்தால், தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது.

இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் நுழையும் யானைகளை துன்புறுத்தக்கூடாது. யானைகள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'வால்பாறையில் வழக்கமாக யானைகள் இடம் பெயர்ந்து செல்லும் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில், தேயிலை பயிரிட்டும், சொகுசு விடுதிகள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால், வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், மலைகளை கடந்து செல்லும் போது, வழக்கமான வழித்தடங்கள் இல்லாததால், எஸ்டேட்கள், குடியிருப்பு பகுதியில் முகாமிடுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, வன ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...