கவுண்டச்சிபுதூரில் தீ விபத்து - இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர்

கவுண்டச்சிப்புதூர் பகுதியில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தியபோது, அதில் இருந்து பரவிய தீயால் விவசாயி வைத்திருந்த வைக்கபோர் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: பெரும் விபத்து ஏற்படும் முன்பே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ராம்நகர் குடியிருப்பு பகுதியில் மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டிய பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. விவசாய நிலங்களும் உள்ளன.

அங்கு கால்நடைகளுக்கு உண்டான தீவனங்கள் வைக்க போல் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தூய்மைப்படுத்தி குப்பைகளை அப்புறப்படுத்தாமல் துப்புரவு பணியாளர்களே தீட்டு வந்தனர்.



அப்போது அங்கு அடித்த காற்றில் அந்த தீ பரவி அங்குள்ள விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கபோர் திடீரென தீப்பற்றி எரிந்து அதிகளவில் தீ பரவியதால் அங்குள்ள பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தாராபுரம் தீயணைப்பு துறை தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்குள்ள தீயினை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து வந்தனர்.

அங்குள்ள பொதுமக்கள் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...