உடுமலையில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

உடுமலைபேட்டையில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு பேரணி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு, மடத்துக்குளம் வழக்கறிஞர்கள் சங்கம், பிரியா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் டாக்டர்.அப்துல்கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை சார்பில்போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மடத்துக்குளம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து இந்த பேரணிதுவக்கி வைக்கப்பட்டது.



மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் புகையிலை ஒழிப்பிற்கான உறுதிமொழியை வாசித்தபின் பேரணியை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில் வழககறிஞர்கள் நாகமணிக்கம், அன்பு, சிவகுமார், பழ. முருகேசன், தமிழினியன் ஆகியோரும், காவல் துறை சார்பில் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் இசக்கி,.திருவெங்கடேசன், சக்திவேல், ராஜ்குமார், குணசேகரன், இப்ராஹிம் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

பேரணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 170 பேர் கலந்து கொண்டனர்.

பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கி பழனி-உடுமலை சாலை பேருந்து நிலையம், நான்கு வழி சந்திப்பின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் முடிக்கப்பட்டது.

மாணவ மாணவிகள் வழிநெடுகிலும் புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...