திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது

திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவருமான ஸ்ரீமதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


திருப்பூர்: இந்த மாநாட்டில் பள்ளிகள்,மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் மதுபான கடைகள் இருப்பதை அகற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக இந்திய அளவில் போதை எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு இன்று நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவருமான ஸ்ரீமதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இந்த மாநாட்டில் பள்ளிகள், மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் மதுபான கடைகள் இருப்பதை அகற்ற வேண்டும். பல்வேறு வடிவங்களில் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் வரும் போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...