கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் - 900த்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று சிகிச்சை பெற்றனர். அனைத்து வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


நீலகிரி: கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்தனர்.

நீலகிரி மாவடம் கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் நிறுவனம் மற்றும் கோவை குமரன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, எஸ்.கைகாட்டி சோலூர் மாவட்டம், ஒம் நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய் நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 900த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு முகாமிக்கு வந்தவர்களுக்காக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...