குன்னூரில் தொடங்கிய அத்திப்பழம் சீசன் - பழங்களை சுவைப்பதற்காக கூட்டம் கூட்டமாக குவியும் இருவாச்சி பறவைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளதையொட்டி, அத்திப்பழங்களை சுவைப்பதற்காக அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக திகழும் இருவாச்சி பறவைகள் படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.


நீலகிரி: அத்திமரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ள இருவாச்சி பறவைகளை அவ்வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகள், போட்டோ எடுத்து ரசித்து சென்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, அங்கு தற்போது மிதமான காலநிலை நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மலைப்பாதையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மரங்களில் பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன.

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு உள்ள மரங்களில் அத்திப்பழங்கள் அதிகம் காய்த்து உள்ளன. எனவே அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக திகழும் இருவாச்சி பறவைகள் அத்திப்பழம் சுவைப்பதற்காக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளன.

அவை தனது நீண்ட அழகால் அத்திப்பழங்களை கொத்தி தின்று வருகின்றன. குன்னூர் பகுதியில் இருவாச்சி பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவற்றை போட்டோ எடுத்தும் ரசித்தும் செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...