உலக சுற்றுலா தினம் - கோவையில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் மாணவர்கள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் மூலம் ஒரு லட்சம் விதைபந்துகளை தயாரிக்கும் நிகழ்ச்சியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.


கோவை: மாணவர்கள் உருவாக்கும் விதைகளில் இருந்து சுமார் 40,000 முதல் 50,000 மரங்கள் உருவாகவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பெருமிதம் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுலாத்துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுலாத்துறை, ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர், டிராவல் முகவர் சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு, ஒரு இலட்சம் விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

பின்னர் மாணவ, மாணவர்களிடம் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கனகராஜ், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுலாத்துறைத் தலைவர் பேராசிரியர் சங்கீதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீனிவாசன் உட்பட கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், 2023 ஆண்டின் உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு" என்பதாகும். தொழில்துறை, மருத்துவம், கல்வி சுற்றுலா, உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயற்கை எழில்மிகு இடங்கள், கோயில்கள், அருங்காட்சியம், அருவிகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

மேலும், பசுமையான பகுதிகள் அதிகமுள்ளன. இருந்தாலும் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பை 33 சதவீதமாக அடைவதற்கான இடைவெளியை குறைத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் இன்று மற்றும் நாளையும் ஒரு இலட்சம் விதைபந்துகளை உருவாக்கிறார்கள்.

இந்த விதைகளில் 40-50 சதவீதம் வரை மரங்களாக வளர வாய்ப்புகள் இருக்கின்றது. மாணக்கர்களாகிய நீங்கள் உருவாக்கும் விதைகளில் இருந்து சுமார் 40,000 முதல் 50,000 மரங்கள் உருவாகவுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...