உடுமலை பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை - தாய்மார்கள் தவிப்பு

உடுமலை பேருந்து நிலையத்தில் எப்போதும் பாலூட்டும் அறை பூட்டியே கிடப்பதால், குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


திருப்பூர்: பூட்டி இருக்கும் பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பயணியர் செல்கின்றனர். இதில், உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கும், மூணார் வரை குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களும் அதிகம் உள்ளனர்.அடிப்படை வசதிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்தும், பயன்படுத்த முடியாமல் இருப்பது பலருக்கும் மனவேதனை அளித்து வருகிறது.

பஸ் ஸ்டாண்டில், பாலுாட்டும் தாய்மார்களுக்கென தனி அறை உள்ளது. இந்த அறை எப்போதும் பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பசியாற்ற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளின் பசியாற்ற இடம் தேடி கடைகளில் அனுமதி கேட்கும் அவலத்தில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...