தாராபுரத்தில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் - காணொளியில் திறந்து வைத்த முதலமைச்சர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அரசு அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.



தாராபுரம் ஒன்றிய குழு தலைவரும் தாராபுரம் ஒன்றிய செயலாளருமான எஸ்.வி செந்தில் குமார் குத்துவிளக்கேற்றி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிடம் ஒப்படைத்தார்.



பின்னர்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், பொறியாளர் காந்திமதி, குளத்துப்பாளையம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி துணை தலைவர் துரைச்சாமி, பேரூராட்சி தலைவர் சுதாகர் கருப்புசாமி, ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...