இவர்களை விசாரித்தால் ஆதாரங்கள் கிடைக்கும் - கோடநாடு வழக்கு விசாரணையில் தனபால் பேட்டி

நான் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை விசாரணை நடத்தினால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்கும் என கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பின் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.


கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் சகோதரர் தனபால் மீண்டும் சிபிசிஐடி போலிசாரிடம் முன்னிலையாகி விளக்கமளித்தார்.



கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரண்டாவது முறையாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் விசாரணைக்காக ஆஜரானார்.

சுமார் ஆறு மணி நேரம் விசாரணை முடிந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,



50க்கும் மேற்பட்ட நபர்களின் பட்டியல் கொடுத்திருப்பதாகவும் அதில் ஒரு சில நபர்களை விசாரித்துள்ளார்கள் என பேசினார்.

நான் கூறியதற்கும், அவர்கள் கூறியதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

கனகராஜன் இறப்பு அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து புதிதாக 62 கேள்விகளை என்னிடம் எழுப்பினார்கள்.

நான் அதற்கான பதிலை தெரிவித்தேன். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை இது சம்பந்தமாக குறிப்பிட்டு பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எனவே அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல தயாராக இல்லை. தற்பொழுது 62 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் கடந்த முறை 50க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது.

தற்பொழுது நடைபெற்ற விசாரணையும் திருப்தியாக இருந்தது. மீண்டும் ஆஜராகும்படி எந்தவித சம்மனும் வழங்கப்படவில்லை. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் நான் மன நலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறுவதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என தனபால் கேள்வி எழுப்பினார்.

மேலும் நான் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை விசாரித்தால் ஆதாரங்கள் வெளிவரும் எனவுன் என்னுடைய இல்ல விழாவில் சுரேஷ்குமார் கலந்து கொண்டுள்ளார் அதற்கான புகைப்படங்களும் என்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

சுரேஷ்குமார் தான் 24 மணி நேரத்தில் குறைந்தது நான்கில் இருந்து 5 மணி நேரம் என்னுடைய தம்பி கனகராஜிடம் பேசுவார் எனவும் என்னுடைய தம்பியும் அவரிடம் நன்கு பேசுவார் எனவும் தனபால் கூறினார்.

சென்னை சென்றாலும் இருவரும் ஒரே அறையில் எடுத்து தங்குவார்கள் ஒன்றாகவே மது அருந்திவிட்டு வரும் வரை ஒன்றாகத்தான் இருப்பார்கள்.

கனகராஜ் உயிரிழந்த பொழுது மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக ஊற்றி கொடுத்து அந்த இடத்திலேயே விபத்து நடத்தினார்கள் அல்லது உடன் இருந்தவர்கள் வேறு இடத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை எனவும் விசாரணையில் தெரியவரும் எனவும் பேட்டியளித்தார்.

மது அருந்திய நேரத்தில் 10 பேர் இருந்துள்ளார்கள், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இளங்கோவனின் தீவிர விசுவாசியை சொல்லலாம் எனவும் மனநிலை சரியில்லை எனக்கு ஜாமின் வழங்கும் படி நான் எப்பொழுதுமே கேட்டதில்லை எனவும் கூறிய தனபால், தூக்கம் வராததால் தான் நான் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...