காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு - பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்

பெங்களுருவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் கோவையில் இருந்து செல்லும் கர்நாடகா பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன.


கோவை: தமிழகத்திறகு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவை உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டன.

கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அதிகாலை நேரத்தில் 3 பஸ்கள் மட்டுமே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. மற்ற பஸ்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

மற்ற பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...