உங்கள் டி.ஆர்.பிக்கு நான் அரசியல் பேசவேண்டுமா? - செய்தியாளர்களிடம் சீறிய அண்ணாமலை

உள்ளுர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் என கோவையில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கோவையில் பாஜகவினர் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையம் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.



கையில் கடப்பாரை பிடித்து குழி தோண்டி மரக்கன்றுகளை நடவு செய்த அண்ணாமலை, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் இணைந்து தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நாடு முழுவதும் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் எனவும் இதை தொடர்ந்து கதர் ஆடைகளை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நான்காயிரம் கோடி என இருந்த காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் எனவே உள்ளூர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஒரு மணி நேரம் எந்த புகைப்படமும் செல்ஃபியும் இல்லாமல் அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அவரிடம் டெல்லி பயணம் குறித்தான கேள்விக்கு உங்கள் டிஆர்பி ஏற்றுவதற்கு நான் எதற்கு அரசியல் பேச வேண்டும் கூறி சென்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...