அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர் அமராவதி ஆற்றில் முறைகேடாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி ஆத்துக்கால் புதூர் செல்லும் வழியில் எரசனம்பாளையம் வடுகபாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றில் இருந்து முறைகேடாக பழனிச்சாமி, மகுடபதி, செல்வராஜ், சுப்பிரமணி, ஆகியோர் தோட்டத்திற்கு முறைகேடாக தண்ணீர் திருட முயன்றுள்ளனர்.

அதற்காக ராட்சத குழாய்கள் இரவு 10 மணி அளவில் இருந்து 3 ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டுவதோடு இதில் அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதற்காக தண்ணீர் குழாயுடன் மின் இணைப்பையும் சேர்த்து பதித்து வந்துள்ளனர். இதுகுறித்து பல புகார்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முதலமைச்சரவர்கள் மற்றும் இதர வருவாய் துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது புகார் பலமுறை அதிகாரிகளை செல்போனில் அனைத்தும் மௌனம் காத்து வருகிறார்கள்.

அங்குள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...