உடுமலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

இந்திய துய்மை திட்டத்தின் கீழ் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் துய்மை பணிகளில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலையில் இந்திய துய்மை திட்டத்தின் கீழ் துய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட பழனியண்டவர் நகர் முத்தையா பிள்ளை லே அவுட் , கிரீன் பார்க் லே அவுட், முனீர் நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுரைபடி உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, சீனிவாசன், தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி வண்டிகளில் போடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு, நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, கணேஸ் ஆனந்த் ,பிரச்சார அணி சி ஆர் சின்ராஜ் ,நகர பொதுச்செயலாளர் ஐயப்பன், விஸ்வநாதன், தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் கண்ணப்பன் ,நகரத் துணைத் தலைவர் நகர செயலாளர்கள் ஹரிகரன் செல்வராஜ், கவிதா, செல்வி, மகளிர் அணி தலைவர் ராதிகா, கணேஷ் ஆனந்த், கொண்டம்மாள், பட்டியலின நகர தலைவர் பழனிச்சாமி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் நட்ராஜ் ,மத்திய நலத்திட்ட பிரிவு நகர தலைவர் திருஞானம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், ஓபிசி அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...