வால்பாறையில் தொடர் மழை - இரண்டு வீடுகள் இடிந்து சேதம்

வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை வால் பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து இரண்டு வார காலமாக தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருகிறது .

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக படிக்கட்டுகள் தடுப்பு சுவர்கள் சேதமடைகின்றன.

இந்நிலையில் வால்பாறை நகரை ஒட்டி உள்ள அண்ணா நகர் பகுதியில் அமுதா என்பவரின் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பக்கத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீடும் சேதமடைந்தது.



இதனால் இரண்டு வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித சேதம் இன்றி தப்பினர்.



தகவல் அறிந்த வால்பாறை நகரமன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் நகர கழக செயலாளர் சுதாகரன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...