உடுமலை அருகே இலவச மருத்துவ முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

உடுமலை அருகே முக்கோணம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் பலர் பங்கேற்று பயன் பெற்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் கு.சி மணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் வரவேற்புரை வழங்கினார்.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் இளங்கோவன் வெற்றியின் முதல் படி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் ப கணபதி நாளைய பாரதம் நமதே என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிரியா நர்சிங் முதல்வர் எம் தவசு மணி தலைமையில் 12 பேர் கொண்ட குழு சர்க்கரை நோய் வியாதி கண்டறிதல், ரத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முதலான பல்வேறு பரிசோதனைகளை முக்கோணம் பொதுமக்களுக்கு செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்படுத்தி முகாமை பயன்படுத்தி கொண்டனர். நர்சிங் கல்லூரி துணை முதல்வர் மேனகா, இயற்கை உணவுகளும், இனிய வாழ்வும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நோய் நொடிகள் அன்டாதவாறு நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் அவர் விளக்கி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...