கோவிலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மூணாறு சாலையில் மறியல்

கட்டளை மாரியம்மன் கோயிலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி உடுமலை மூணார் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர்: கோயில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி மூணாறு சாலையில் பொது மக்கள் தீடீர் மறியல் நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கோடந்தூர் மலை கிராமத்தில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு வியாழன், ஞாயிறு பொதுமக்கள் அதிகம் சாமி தரிசனத்துக்கு வருவது வழக்கம்.

அதே போல் போல் இந்த வாரமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் கூடுதல் பேருந்துகள் உடுமலைக்கு இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி சின்னாறு சோதனை சுவடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் உடுமலை- மூணாறு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...