உடுமலை ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் தூய்மை பாரத திட்டத்தின் நடைபெற்ற தூய்மை பணிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை பேட்டையில் உள்ள ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் தூரிதமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டும் தூய்மை இந்தியா பணி பாரத திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.



இப்பணியில் அமராவதி பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள், ஆண்டிய கவுண்டனுர் ஊராட்சி நிர்வாகம் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அமராவதி வனச்சரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து அமராவதி நகர் மற்றும் அமராவதி அணை சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்தனர்.



இந்நிகழ்வில் அமராவதி நகர் சைனிக் பள்ளியின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னெல் தீபு, பள்ளியின் துணை முதல்வர் விங் கமாண்டர் தீப்தி உபாத்யாயா, அமராவதி வனச்சரகர் சுரேஷ், ஆண்டிய கவுண்டனுர் பஞ்சாயத்து தலைவர் ரா மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக கடந்த பத்து நாட்கள் தூய்மையை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்வுகள் சைனிக் பள்ளி மாணவர்களால் நடத்த பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...