காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜரின் நினைவு தினம் - பேரூரில் உள்ள அஸ்தி கலச நினைவு மண்டபத்தில் மலரஞ்சலி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டும் காமராஜ் மக்கள் இயக்கத்தினர் சார்பாக பேரூர் பகுதியில் உள்ள காந்தியின் அஸ்தி கலச நினைவு மண்டபத்தில் காந்தி மற்றும் காமராஜருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: மகாத்மா காந்தி, காமராஜர் மற்றும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆகியோரின் அஸ்திக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

கோவை பேரூர் நொய்யல் நதிக்கரையில் மகாத்மா காந்தி, காமராஜர், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து காமராஜரின் அஸ்தியும், டெல்லியிலிருந்து காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர்களின் அஸ்திகளும் கொண்டு வரப்பட்டு கோவை பேரூர் பகுதியில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதி நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில், அண்மையில் பேரூர் படித்துறை முழுவதுமாக புனரமைக்கப்பட்டு அஸ்தி மண்டபமும் புதுப்பிக்கப்பட்டது.



இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டும் காமராஜ் மக்கள் இயக்கத்தினர் சார்பாக மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில், மகாத்மா காந்தி, காமராஜர் மற்றும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆகியோரின் அஸ்திக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...