உடுமலை ஓன்றியத்தில் கிராம சபைக்கூட்டம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு

உடுமலை ஒன்றியங்களுக்கு உடபட்ட பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஓழிப்பது, துய்மை பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: காந்தி ஜெயந்தியையொட்டி உடுமலை ஓன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.



பெரிய கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாகவும், வடகிழக்கு பருவ மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கை குறித்தும் பொது சுகாதாரம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.



எனது குப்பை எனது பொறுப்பு என் கிராமத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருப்பது எனது கடமை என அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இதே போல போடிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் அப்போது ஊராட்சிகள் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



பின்னர் தூய்மை உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.



இதேபோல சின்னவீரன்பட்டி ஊராட்சியில் மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...