காந்தியடிகள் பிறந்த நாள் - மனக்கடவு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனக்கடவு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சமபை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனகடவு ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மங்களம் கு.செல்லமுத்து, முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ராஜதுரை, ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் கே.சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களை குறைகளை கேட்டறிந்தனர்.



அப்போது, பொதுமக்கள் கூறிய சாக்கடை குடிநீர், தெரு விளக்கு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்து விரைவில் முடித்து தருவதாக தெரிவித்தனர்.



மேலும் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...