தீ விபத்திற்கு இழப்பீடு கோரி கருப்புக் கொடி - தாராபுரம் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

குப்பைகளை எரிக்க வைக்கபடும் தீயால் வைக்கோல் தீப்பற்றி எரிந்து சேதமான விவசாயிக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி வந்து கோரிக்கை வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பொது மக்கள் கருப்பு கொடி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சம்பத் நகர் பூங்காவில் தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஒ சிவகுருநாதன் கிராமஊராட்சி, எ.பி.டி.ஒ இசக்கிமுத்து, துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் பொதுமக்கள் சார்பாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. மேலும் வரவு, செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் பஞ்சாயத்து பகுதி முழுவதும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.

அலங்கியம் ரோடு ராம் நகர் பகுதியில் தூய்மைபணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைத்ததால் ஒரு விவசாயின் வைக்கோல் எரிந்து சேதமானது. அதற்கு நஷ்ட ஈடு கேட்டு கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் வந்து தலைவர் செல்வியிடம் சரமாரி கேள்வி கேட்டனர்.



மேலும் தீ விபத்து சம்பந்தமாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி மன்ற தலைவி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் டெங்கு பராவல் தடுப்பு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்பட-21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...