பிளாஸ்டிக் இல்லா மாநகரம் - கோவை மாநகராட்சியில் உறுதிமொழி ஏற்பு

செப்டம்பர் மாத SBM சிறந்த தூய்மை பணியாளர் பரிசை பெற்ற கோவை மேற்கு மண்டலம் 60 வார்டு தூய்மை பணியாளர் முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


கோவை: SBM தூய்மை இந்தியா திட்ட குழுவின் சார்பில் சுற்றுசூழல் பாது காக்க கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பைகள் தரம் பிரித்து வாங்கும் பணிகளை ஊக்கப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக வார்டுகளில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளரை அதிகாரிகள் மூலமே தேர்வு செய்து ஊக்கப்படுத்த சிறப்பு பரிசு அதிகாரிகள் மூலமே வழங்கப்படுகிறது.

இந்த மாத பரிசு கோவை மாநகராட்சி சுகாதாரா ஆய்வாளர் ஜீவமுருகராஜ், 60 வது வார்டு மேற்பார்வையாளர் சரவணன் 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி ஆதிமகேஸ்வரி ஆகியோருக்கு வழங்கி SBM குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பரிசை வழங்க உதவி அளித்த குழு SBM TEAM MONTHLY 200 குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நகரில் உருவாகும் குப்பைகள் ஒன்றாக வாங்கி வேறு ஒரு இடத்தில போடுவதால் பெரும் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது அவை மறுசுழற்சி செய்ய வேண்டுமெனில் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவேண்டும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும் காய்கறி உணவு கழிவுகள் தனியாகவும் பிரித்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் மக்கும் குப்பைகள் முழுமையாக தரம் பிரிக்கும் இலக்கை விரைவில் அடைவோம் மாநிலத்திலேயே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத மாநகரம் எனும் பெருமை கோவை மாநகரம் அடைய உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...