கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு

கோவை கொடிசியா அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடனுதவி வழங்கும் விழாவில் கடன் கிடைக்காமல் வெளியேறிய நபரால் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் உதவிகளை வழங்கினார்.

கோவை கொடிசியா அரங்கில் கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.



இதனிடையே விழாவில் சதீஷ் என்பவர் தனக்கு லோன் கிடைக்கவில்லை என்று மனவேதனை பட்டு வெளியேறினார். அதனால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிர்மலா சீத்தாராமன் அவரை மேடைக்கு அழைத்து பிரச்சனையை தெரிவிக்க கூறினார். அப்போது தனக்கு லோன் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஆகுவதாக கூறினார். உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக லோன் கிடைக்க ஏற்பாடு செய்துத் தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதன்பின்னரே சற்று நேரம் நிலவிய சலசலப்பு அமைதியானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...