கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்று சாலை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத்தலைவர் ஜே.பீட்டர் தலைமை தாங்கினார்.

அப்போது தாராபுரம் கோட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பிறகு ரத்த கையெழுத்திட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டச்செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்ட கிளை பொருளாளர் பாலா ராஜசேகர், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரத்த கையெழுத்து படிவங்களை வருகிற 13-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இல்ல அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் அனைவரும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தி வழங்குவது என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்வதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. முடிவில் சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...